April 21, 2021

Tamil cinema

News is entertainment

மருதமலை படத்தில் நடித்த காமெடி நடிகையா இது…!இப்டி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிடுச்சு.

வடிவேலு காமெடியில் நடித்து பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். ஒரு காமெடி சீனில் வந்தால் கூட அவர் வடிவேலுவுடன் வந்தால் போதும் அவர்களின் நடிப்பும் சரி, அவரின் வசனங்களும் சரி மக்கள் மத்தியில் ஆழாமாய் பதிந்து விடும். இதற்க்கு முன்னர் எந்த படத்திலும் நடிக்கதவர்களை கூட வடிவேலு தன்னுடன் சேர்த்து நடிக்க வைத்து அவர்களின் வாழ்வையே ஒரு நடிகராக மாற்றியுள்ளார்.

அதனை அந்த நடிகர்களும் பெரும்பாலும் இதற்க்கு எல்லாமே அண்ணன் வடிவேலு தான் காரணம் என்று ஒபெனாக கூறி இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண் நபர்களையே வடிவேலு தேர்வு செய்து அவருடன் சேர்த்து நடித்து வருகிறார் என மக்கள் நினைத்து கொண்டிருந்த சமயங்களில் தான் அவர் பெண் நடிகர்களுடன் சேர்ந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்க துவங்கினார்

அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்த நடிகைகள், தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெரும் பெயரினை பெற்றிருக்கிறார்கள்.அந்த வகையில் தான் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர், தான் நடிகை பிரியங்கா.

இவர் அந்த படத்தில் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்திருப்பார். வடிவேலு ஒரு பேருந்தில் ஏறி அனைத்து பெண்ணிற்கும் லவ் லெட்டர் கொடுக்கும் அந்த காமெடி சீனில் நடித்த நடிகை இவர்தான்.

இவர் தனது சினிமா அனுபவத்தினை காமெடியாக ஒரு நிகழ்ச்சியில் பகிர்துள்ளார். இவரின் நிஜமான பெயர், சந்திரகலா, சினிமாவுக்காக மாற்றி அதனை பிரியங்கா என வைத்து கொண்டார். இவர் சிறு வயதிலேயே நடிக்க வந்து விட்டார் என கூறுகிறார்.அவர் அந்த காமெடி சீனில் நடிததனை பார்த்து அவரை சித்தி சீரியலில் கூட நடிக்க அழைத்து நடித்தும் கொடுத்துள்ளார்.

பின்னர் விவேக், வடிவேலு என பல முன்னணி காமெடி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார். அவரின் ஒரே சீனில் பிரபலமாகியதும் வடிவேலு படத்தில் தான். மருதமலை படத்தில் ஐந்து கணவர்களை கூட்டி வந்து காவல் நிலையத்தில் திருமணம் செய்ய கூறுவதும், அதனை வடிவேலு காமெடியாக கையாள்வது என அந்த காமெடி சீன இன்றும் பேமஸ் தான்.

மருதமலை (அர்ஜுன்) காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நச்சியாபுரம் கிராமத்தில் வேலைக்கு செல்கிறார் அங்கே அவர் மூத்த அதிகாரி “என்கவுண்டர்” ஏகாம்பரம் (வடிவேலு (நடிகர்) என்பவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார். அவர், தனக்காக எல்லா விதமான வேலைகளையும் செய்யச் சொல்கிறார்.

ஒரு நாள் ஏகாம்பரத்தின் கருணையினால் நீதிமன்ற காவலிலுள்ள ஒரு குற்றவாளி தப்பித்து விடுகிறார். இதற்காக தண்டிக்கப்பட்ட மருதமலை அவரது உயர் அலுவலரின் வீட்டை சுத்தம் செய்ய் பணிக்கப்படுகிறார். அங்கு திவ்யா (மீரா சோப்ரா) மீது காதலில் விழுகிறார். பின்னர், சந்தையில், ஏகம்பரம் ஒரு பிச்சைக்காரனால் அவமானப்படுத்தப்படுகிறார்.

பிறகு மாசி(லால்) என்பவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் ஒரு நபரை கொலை செய்வதை மருதமலை பார்க்கிறார். பின்னர் தேர்தல் ஆணையர் அந்த இடத்திற்கு வருகிறார், மாசியின் எதிர்ப்பு காரணமாகவே கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறுவதில்லை என்று அவர் கண்டுபிடிக்கிறார்.

எனவே தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறார். பின்னர், தேர்தல் நாளன்று, பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், மாசியின் ஆட்கள், வாக்களிக்கும் மக்களை வெளியேற்றுவதோடு தேர்தல் ஆணையரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். மருதமலையின் தந்தை (நாசர்) மாசி மீது புகார் அளிக்கிறார்.

அந்த நேரத்தில், மருதமலை அங்கு வந்து, மாசியை கைது செய்கிறார். மாசியின் ஆட்கள் அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. மருதமலை துணிச்சலுக்காக பதவி உயர்வு பெறுகிறார். பின்னர் மாசியினை எதிர்த்து எவ்வாறு தேர்தல் நடைபெறுகிறது எனபது மீதிக் கதை.

அந்த சீனில் தான் இவரின் முகம் பலருக்கு தெரிய வந்தது. அவர் இந்த சீனில் நடித்த அனுபவத்தினை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். சினிமாவில் இவர் நடித்த அனைத்து அனுபவங்களையும் முகத்தில் சிரிப்புடன் பகிர்ந்து அழகாக ஒரு பேட்டியினை கொடுத்துள்ளார்.